சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இளம் நடிகை காவ்யா-வா இது..? - வைரலாகும் புகைப்படம்


பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி. நிறத்தை மையப்படுத்திய இந்த சீரியலில் கறுப்பே பிடிக்காது எனும் சவுந்தர்யாவுக்கு, மருமகளாய் வருகிறாள் கண்ணம்மா.

ஆனால், கண்ணம்மா-வின் சித்தி மகளான அஞ்சலியை இளைய மகன் அகிலனுக்கு மனம் முடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் சவுந்தர்யா. ஆனால், அஞ்சலிக்கோ அகிலனின் அண்ணனும், தனது அக்காவின் புருஷனுமான பாரதி மீது தான் காதல். 

இதில், சவுந்தர்யாவின் உறவினர் பெண்ணாக கண்ணம்மாவிற்கு ஆறுதல் சொல்வதற்கு எனவே ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை காவ்யா அறிவு மணி. மேலும், அஞ்சலியின் தாய் மாமா செல்வகணபதியை காதலித்து வருகிறார். ரசிகர்களின் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ள இந்த சீரியல் மூலம் பிரபலமாகியுள்ளார் காவ்யா அறிவுமணி.

சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.