ஏ.ஜி.எஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் "பிகில்" திரைப்படம் சுமார் ரூ 180 கோடி தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் கடந்த 12-ம் தேதி வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில் பிகில் படத்தில் 3 விஜய் ஒருவர் ராயப்பன் அவருடைய மகன்கள் மைக்கல், பிகில் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இப்படத்தில் விளையாடும் போது பின்னணி கமெண்ட்ரி கொடுப்பவராக ஆர் ஜே ஆனந்தி உள்ளாராம்.
அவர் ஒரு பேட்டியில் பிகில், மைக்கல் இருவரும் ஒருவரே என்பது போல் கூறிவிட்டார். ஆனால், பிகில் என்பது மூன்றாவது விஜய்யின் பெயர் என்று ஒரு தரப்பினரும் பிகில் என்பது ஒரு கால்பந்து குழுவின் பெயர் என இன்னொரு தரப்பினரும் கூறி வந்தனர்.
ஆனால், ஆர்.ஜே.ஆனந்தி கொடுத்த பேட்டியின் மூலம் இரண்டு விஜய் தான் படத்தில் என தெரிகின்றது. இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் இத்தனை நாட்கள் ரகசியத்தை இப்படி கூறிவிட்டாரே.? என அவர் மீது கடுப்பில் உள்ளனர்.
Tags
Bigil Movie