நடிகர் விஜய், அஜீத், விஷால், ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு கோடிகளில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. நடிகைகள் ரேவதி மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட சில நடிகைகள் கொஞ்சம் வித்தியாசமாக நடிகைகள் என்பதில் இருந்து மாறி இயக்குனர்களாகவும் மாறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்னும் சில நடிகைகள் நானும் இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆனால், காஜல் அகர்வால் சற்று வித்தியாசமாக தயாரிப்பாளர் ஆக ஆசைப்பட்டார். இதையடுத்து கதை கேட்க ஆரம்பித்தார். இயக்குனர் பிரசாத் வர்மா கூறிய ஆவ் 2 என்ற ஸ்கிரிப்ட் பிடித்ததால் தயாரிக்க முன்வந்தார். இதற்காக காஜல் அகர்வால் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கவும் முடிவு செய்தார்.
ஏற்கனவே, பெண்களுக்கான அணிகலன்கள் விற்கும் கடை மற்றும் பெண்களுக்கான பிரத்யேக துணிக்கடைரெஸ்ட்டாரன்ட்கள் என நடிப்பு தவிர தொழில் துறையிலும் கொடி கட்டி பறந்து வரும் காஜல் அகர்வாலுக்கு சினிமா தயாரிப்பில் ஆர்வம் வந்தது ஒன்றும் தப்பில்லை.
ஆனால், காஜல் அகர்வாலின் நலம் விரும்பிகள் சிலர்படம் தயாரிக்குற வேலையெல்லாம் வேண்டாம். அதில், அனுபவம் உள்ளவர்களே கஷ்டப்பட்டு கடனாளிகள் ஆகும் சூழ்நிலையில் தயாரிப்பில் அனுபவமே இல்லாத உனக்கு இது வேண்டாத வேலை.சினிமாவில் நடிச்சோமா.? சம்பளத்தை வாங்குனோமான்னு இருக்கணும். அது தான் பிரச்சனை இல்லாத வேலை.
சினிமாவில் சம்பாதித்த காசு சினிமாவிலேயே போய்விடும் என திகில் கிளப்பி விட்டுள்ளனர். இதனால், பீதியான காஜல் அகர்வால் படம் தயாரிக்கும் கனவை கலைத்து விட்டார். சினிமா தவிர வேறு துறைகளில் முதலீடு செய்தால் பொருள் நம் கையில் இருக்கும் அதனை எப்போது வேண்டுமானலும் விற்று பணமாக்கி கொள்ளலாம்.
ஆனால், சினிமாவில் போட்டு விட்டால் ஒரு வாரம் தான் அதற்கு ஆயுள். அதற்குள் கலெக்ஷன் ஆகவில்லை என்றால் அம்பேல் ஆகி விடும் என்பதை உணர்ந்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
தற்போது, இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் அவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற ரகசியமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி முக்கிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என தூது விட்டு வருகிறாராம்.


