பிகில் கொண்டாட்டம் - ட்விட்டர் எமோஜி வெளியானது - ரசிகர்கள் ஆரவாரம் - இதோ புகைப்படம்


நடிகர் விஜய் நடித்துள்ள 63வது திரைப்படம் ‘பிகில்’. இந்தப் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான பூஜை முடிவான அன்றே தீபாவளிதான் ரிலீஸ் என முடிவு செய்திருந்தது படக்குழு.

அதற்கு காரணம், தீபாவளிக்கு  தன் ரசிகளுக்கு தக்க பரிசாக ‘பிகில்’ படத்தை கொடுக்க வேண்டும் என்ற விஜயின் அடக்க முடியாத ஆசை.அத்துடன் கடந்த சில வருடங்களாக விஜய்க்கு தீபாவளி செண்டிமெண்ட் சரியாக ஒர்க் அவுட் ஆக தொடங்கி இருப்பதுதான்.

கடைசி நேரம் வரை படம் வருமா? வராதா? என ‘வெறித்தனமாக’ காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இறுதிக் கட்டத்தில் தீபாவளி இனிப்பாக வெள்ளித்திரையில் வேகம் எடுப்பார் விஜய். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சமூக வலைத்தளங்களும் உள்ளன.

அதிலும், ட்விட்டர் என்றால் சொல்லவே தேவையில்லை. விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் ஸ்பெஷலாக எமோஜியை ரிலீஸ் செய்து விடுவார்கள். அந்த வகையில், பிகில் படத்திற்கும் எமோஜியை ரிலீஸ் செய்துள்ளார்.

தற்போது, வடிவம் பெற்றுள்ள அந்த எமொஜி இன்னும் சில மணி நேரங்களில் டிவிட்டரில் பயன்பாட்டுக்கு வரும். ட்விட்டர் நிர்வாகம் டிசைன் செய்துள்ள எமோஜி இதோ..

Advertisement