சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் அடுத்து தயாராகியுள்ள படம் பிகில். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை, அட்லீ இயக்கியுள்ளார்.
தெறி, மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ இணையும் 3வது படமான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர் கடந்த 12-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த படத்தின் டிரைலர், தற்போது வரை 1.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
டிரைலர் வெளியாகி இதுவரை 19 லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது. விரைவில் 20 லட்சம் லைக்குகளை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படம் குறித்து பேசுகையில், சமீப காலமாக விஜய் படங்களில் காமெடி பெரிய அளவில் இல்லை. ஆனால், பிகில் படத்தில் காமெடி நன்றாக வொர்க்அவுட் ஆகியுள்ளது. விஜய்யின் புதிய நகைச்சுவை பரிமாணத்தை பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.
மேலும், அரசியல் சம்பந்தமான வசனங்கள் இல்லை, அறிமுக பாடலில் தளபதியின் வெறித்தனமான டான்ஸ் இருக்கு என படம் குறித்து சில தகவல்களையும் கூறியுள்ளார்.


