நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு நடுவே வெளியானது. பல தடைகள் வந்தாலும் கடந்த 25-ம் தேதி அனைவரும் எதிர்ப்பார்த்தது பிரமாண்டமாக வெளிவந்தது.
ஆனால், படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், ஒரு கம்ளீட் ஸ்போர்ட்ஸ் படம் என்ற இமேஜை பெறமுடியாமல் திணறியது. படத்தின் ஆரம்பத்தில் குப்பத்து மக்களை பற்றிய எண்ணம் மாறனும் பிகிலே என்று ஆரமபித்த படம் பிறகு திருமணமான அக்ரகாரத்து மாமி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் என பெண்களின் பொதுவான பிரச்னையை தொட்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்து நிற்கிறது.
அப்படியிருந்தும் படம் திரையிட்ட இடமெல்லாம் முதல் 5 நாட்களுக்கு ஹவுஸ்புல் தான்.
அதே நேரத்தில் நேற்று பிகில் வசூல் மிகவும் குறைந்துள்ளது.
தமிழகம் முழுதுமே நேற்று ரூ 4 முதல் 5 கோடி தான் நேற்றைய வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் குறைந்த பட்சம் 130 கோடி முதல் 150 வரை வசூலித்தால் தான் படம் லாபம் என்றிருந்த பட்சத்தில்
இப்போது எதிர்ப்பார்த்த ஷேர் வருமா? என்று விநியோகஸ்தர்கள் பீதியில் உள்ளனர்.