நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிகில் படம் குறித்து கலவையான
விமர்சனங்கள் எழுந்தன.
முன்னதாக, தமிழ்நாடு தியேட்டர் உரிமை மட்டும் 100 கோடிக்கும் மேல் விற்பனை ஆனது. இதனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் மினிமம் 150 கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும். அப்போது தான் படம் லாபம் என்ற நிலைக்குள் நுழையும் என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐந்து நாட்கள் முடிவில் இந்த திரைப்படம் தமிழகத்தில் 90 கோடிகளை வசூல் செய்துள்ளது. இன்னும், 60 கோடிரூபாய் வசூலித்தால் தான் நஷ்டம் என்ற நிலையை தான் லாபம் என்ற நிலைக்குள் பிகில் நுழையும்.
இந்நிலையில்,தொடர்ந்து வேலை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் குறையும் என்றும் இந்த வார முடிவில் தமிழகத்தில் மட்டும் 100 முதல் 110 கோடி என்ற இலக்கை அடைந்து விடும் என்றும் நம்புகிறார்கள் விநியோகஸ்தர்கள்.
ஆனால், இந்த வாரம் மூன்று புதிய படங்கள் ரிலீஸ் ஆவதால் பிகில் தமிழகத்தில் மட்டும் 150 கோடி என்ற இலக்கை எட்டுவதற்கு திணறும் என்று கூறுகிறார்கள்.