நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா விரைவில் நடிகர் விஜய்க்கு உறவினர் ஆகவுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. அது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்பது புரிகிறது.
அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரின் பெண்ணை காதலிக்கிறாராம். அவர்களின் திருமண பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.
இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு மதம் என்பதால் திருமணத்தில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதனால், இந்த பிரச்னையில் நடிகர் அதர்வா முன்னின்று தனது தம்பிக்காக பேசி வருகிறாராம்.
அநேகமாக பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும் எனவும் விரைவில் திருமணம் என்றும் கூறப்படுகிறது. இது பற்றிய உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என கூறுகிறார்கள்.