பிகில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தப் படத்தின் கதை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பிகில் படத்தின் கதை மீதான வழக்கு தற்போதுதான் தொடரப்பட்டாலும், இந்தப் பிரச்னை ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்று, கே.பி.செல்வாவின் வழக்கறிஞர் கூறுகிறார்.
அட்லி தரப்பினரிடம் தொடர்ந்து பேசியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், முதலில் இந்த புகாரை விசாரித்த எழுத்தாளர்கள் சங்கம் சில காரணங்களை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளனர்.
அதன் படி எழுத்தாளர் சங்கத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் சென்றது. விசாரித்த நீதி மன்றம் அட்லி தரப்பு ஆதாரங்களையும், ஆவங்கனளையும் தாக்கல் செய்யுமாறு கூறியது. அதே போல, அட்லி தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளது.
அந்த ஆதாரம் தான் அட்லியை சிக்க வைத்துள்ளது. இது குறித்து கதை என்னுடையது தான் வழக்கு தொடர்ந்துள்ள செல்வா என்பவர் கூறுகையில், அட்லி தன்னுடைய 65 பக்க கதையை 2018-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதியும், 242 பக்க கதையை 2018 அக்டோபர் 4-ம் தேதியும் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறினார்.
ஆனால் அவர் முழு கதையை பதிவு செய்துள்ளதாக கூறும் 2018 அக்டோபர் 4-ம் தேதி வியாழக்கிழமை ஆகும். எழுத்தாளர் சங்கத்தில் வியாழக்கிழமைகளில் கதைகளை பதிவு செய்ய முடியாது என்ற நடைமுறை உள்ளது. நிலைமை இப்படியிருக்க, அக்டோபர் 4-ம் தேதி எப்படி அட்லி கதையை பதிவு செய்தார். இது ஒன்றே போதாதா.? பிகில் திருட்டுகதைதான் என்பதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார் செல்வா.