இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி அறிமுகமான 'வம்சம்' திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்
ஆனால் இவரால் வெள்ளித்திரையில் முழு நேர காமெடி நடிகையாக நீடிக்க முடியவில்லை.திரைப்படங்களில் நடிக்க சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால், பிரபல சின்னத்திரை தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்கிற தொடரில் மீனாட்சியாக நடிக்கும் ரக்ஷிதாவின் தோழியாக காமெடி கலந்த ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
நந்தினி, ஜிம் நடத்தி வந்த தொழிலதிபர் கார்த்திக் என்பவரை காதலித்து பெற்றோரை மீறி திருமணம் செய்துக்கொண்டார். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணத்தை எதிர்த்த நந்தினியின் பெற்றோர் பின் இவர்களை ஏற்றுக்கொண்டனர்.
திருமணமாகி ஒரு சில மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கார்த்தியை விட்டு பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டிற்கு நந்தினி சென்ற போதுதான் அரங்கேறியது அந்த துயர சம்பவம்.நந்தினியின் கணவர் கார்த்திக், தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து நந்தினியின் தரப்பில் இருந்தும்... கார்த்திக்கின் குடும்பத்தினர் தரப்பில் இருந்தும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது நாம் அறிந்தது தான்.இந்நிலையில் நந்தினி கணவர் கார்த்திக் இறந்து ஒரு வருடம் கூட முழுமையாக ஆகாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் யோகேஷ்வரன் என்பவருடன் திருமணம் நிச்சயமானதாக குறிப்பிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். யோகேஸ்வரன் நாயகி, சத்யா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.