போதுமான கூட்டம் இல்லாததால் "பிகில்" காட்சியை ரத்து செய்த முக்கிய திரையரங்கம்..!

✦ ஆன்மிகம்   •  

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி வெளியாகிகலைவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும் வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. 

இந்நிலையில், சென்னையின் பிரபல திரையரங்கமான தேவி பாரடைஸ்  அரங்கத்தில் போதுமான  கூட்டம் இல்லாத காரணத்தினால் பிகில் படத்தின் காட்சியை ரத்து செய்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவி திரையரங்கில் மொத்தம் நான்கு திரைகள் உள்ளன. இதில், இரண்டு திரைகளில் பிகில் திரைப்படம் ஒளிரப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மதியம் தேவி பாரடைஸ் அரங்கில் பிகில் படத்தை பார்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்து தியேட்டருக்கு வந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

தேவி பாரடைஸ்-ல் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பது தான். மேலும், டிக்கெட் எடுத்தவர்கள் அனைவருக்கும் இன்னொரு திரையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இது குறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கேட்ட போது, இது வழக்கமான ஒன்று தான். பிகில் படத்திற்கு மட்டுமல்ல, மற்ற படங்களும் இப்படிதான். இரண்டு திரைகளில் ஓடும் போது ஒரு திரைக்கு போதுமான கூட்டம் வரவில்லை என்றால் மற்றொரு திரைக்கு மாற்றி அந்த காட்சியை ரத்து செய்துவிடுவோம் என்றனர்.