இப்போதெல்லாம் சினிமா நடிகைகளுக்கு நிகராக தொலைகாட்சி நடிகைகளும் பிரபலமாகிறார்கள். அந்த வகையில் விளம்பர பட நடிகையாக இருந்து சீரியல் நடிகையாக உயர்ந்து இப்போது சினிமா ஹீரோயினாகியுள்ள வாணி போஜனுக்கு என தனி ரசிகர் வட்டம் உள்ளது.
இந்நிலையில், ZEE தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், நிகழ்சிகள் போன்றவற்றில் பணியாருபவர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்குவதற்கான நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வாணி போஜன் விருந்தினராக வருகை தந்திருக்கிறார்.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல், ரியாலிட்டி ஷோக்களிலிருந்து, சிறந்த ஹீரோ, ஹீரோயின், வில்லி, அம்மா, மாமியார் என விருதுகளை வழங்கும் ‘ஜீ குடும்ப விருதுகள்’ இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட்டன.
அதற்கான விழா, சில தினங்களுக்கு முன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தெய்வமகள், லஷ்மி வந்தாச்சு சீரியல் புகழ் வாணி போஜன் மிக அழகான உடையில் வந்திருந்தார்.
அவர் தேவதை போல இருந்ததாக ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.