"கடந்த 10 ஆண்டில் வெளியான மோசமான திரைப்படம் பிகில்" - சொன்னது யாரு தெரியுமா..? - கடுப்பில் விஜய் ரசிகர்கள்


நடிகர் விஜய் நடிப்பில்உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

படம்தொடங்கிய முதல் 35 நிமிடங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்த பிகில் திரைப்படம் அடுத்தடுத்த காட்சிகளில் பரபரப்பு கட்டத்தை எட்டி வேகமெடுத்து பெண்களுக்கும் கனவுகள் உண்டு, உணர்வுகள் உண்டு என்பதை நம் மனதில் பதிய வைத்து ஒரு நேரடி கால்பந்தாட்ட விளையாட்டை பார்த்த ஒரு பரபரப்பை கொடுத்தது. 

காதல் காட்சிகள், சர்ச் கல்யாண ரகளைகள், ஸ்லோமோஷன் காட்சிகள் போன்றவற்றை சிலவற்றை வெட்டி வீசிவிட்டு VFX-ல் கொஞ்சம் கவனத்தை செலுத்தி ஒரு முழு நீள விளையாட்டு படமாக எடுத்திருந்தால், பிகில் திரைப்படம் இன்னும் சிறப்பாகவும், வேகமான படமாக அமைத்திருக்கும் என்பது தான் பொதுவான ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது. 

ஆனால், குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் ஊடகங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் படத்தில் சிறு பிழை ஏற்பட்டு விட்டால் கூட குய்யோ முய்யோ என விமர்சிக்கும் விமர்சககர்களும் இருக்கவே செய்கிறார்கள். 

இந்நிலையில், பிரபல பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்ஊடகம் ஒன்று பிகில் கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான மோசமான படம் பிகில் என விமர்சித்துள்ளது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--