நாளை பிகில் திரைப்படம் ரிலீஸ். விடிய விடிய கோலாகலமான கொண்டாடத்துடன் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள் முழு வீச்சில் தயாராகிவிட்டனர்.
ரிசர்வேஷன் தொடங்கிய பெரும்பாலான திரையரங்குகளில் முதல் மூன்று நாள் ஹவுஸ் ஃபுல்லாகி விட்டது. படம் எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் பிகில் திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தப்போவது உறுதி.
இந்நிலையில்,உலகம் முழுதும் உள்ள விஜய் ரசிகர்களின் பலம் சற்று முன் வெளியான ஒரு தகவலின் மூலம் உறுதியாகியுள்ளது.ஆம், அமெரிக்காவில் விஜய் படங்களுக்கென தனி வரவேற்ப்பு இருக்கும். அது, பிகில் படத்தின் மூலம் பலமடங்கு உயர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அமெரிக்காவில் இன்னும் சற்று நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ள ப்ரீமியர் காட்சி மூலம் மட்டும் இது வரை $215,434 வசூல் வந்துள்ளதாம். இவை இந்திய மதிப்பில் 1.5 கோடி ரூபாயை தாண்டும்.
மேலும், விஸ்வாசம் படத்தின் அமெரிக்கா மொத்த வசூலை ப்ரீமியர் காட்சியிலேயே பிகில் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.


