விஜய்யா..? அஜித்தா..? - தொலைகாட்சியில் யாரு TRP கிங் - ஒரே படத்தின் மூலம் நிரூபணம் - அதிரடி ரிப்போர்ட்


முன்னணி நடிகர்களுக்குள் எப்போதும் ஒரு போட்டி இருக்கும். அந்த போட்டி படங்கள் வெற்றியா..? தோல்வியா..? என்பதோடு நின்று கொண்டிருந்தன. 

ஆனால், சமீப காலமாக அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல், பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் தொட்டு, தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போது கிடைக்கும் TRP வரை சென்று விட்டது. 

சமூகவலைத்தளங்கள் ஆதிக்கம் மிகுந்த இந்த காலகட்டத்தில் இப்படியான போட்டிகள் குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் அவ்வபோது வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், குறிப்பாக அஜித், விஜய் என்றால் சொல்லாவா வேண்டும். 

தொலைகாட்சியில் TRP கிங் என்றால் விஜய் தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது ஒரே ஒரு படத்தின் மூலம் அதனை தகர்த்துள்ளார்.

இந்த நிலையில், தொலைகாட்சியில் அதிக TRP பெற்ற படங்களை அட்ச்சு தூக்கி விட்டு கம்பீரமாக முதலிடத்திற்கு வந்துள்ளது அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம். இது, தல அஜித்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என தல ரசிகர்கள் இந்த விவரத்தை டிரண்ட் செய்து வருகின்றனர்.

சரி முதல் 5 இடத்தில் இருக்கும் படங்களின் விவரம் இதோ
  1. விஸ்வாசம்- 18,149,000
  2. பிச்சைக்காரன்- 17,696,000
  3. பாகுபலி 2- 17,070,000
  4. சர்கார்- 16,906,000
  5. சீமராஜா- 16,766,000
Previous Post Next Post
--Advertisement--