இந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த குறைவும் இல்லாமல் ஓடிக்கொண்டிருகின்றது.
மிகவும் மோசமான படம் என்று சொல்லும் அளவுக்கு இல்லாமல் சென்டிமென்ட் போர்ஷன்கள் ஒர்க்-அவுட் ஆனாதல் தப்பித்துகொண்டது பிகில்.
ஆனால், பிகிலுக்கு போட்டியாக களமிறங்கிய கைதி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.
கைதி படம் வெற்றியடைந்தும் அதனை கொண்டாட கூட நேரமில்லாமல் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில், இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து வேலைசெய்வது உற்சாகமாக உள்ளதா..? என்று அவரிடம் கேட்டதற்கு " அதெல்லாம் அதிகமாவே இருக்கு, ஆனால் அதனை வெளியில் காட்டிகொள்ள மாட்டேன். அதற்கு இது நேரம் அல்ல. என்று கூறியுள்ளார்.