நடிகர் மாதவன் "இறுதி சுற்று" படத்தின் மூலம் எப்படிபோனேனோ அப்டியே திரும்பி வந்துட்டேன் என மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து, விக்ரம் வேதா திரைப்படம் மாதவனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.
இந்நிலையில், தற்போது "ராக்கெட்டரி:நம்பியின் விளைவு" என்ற பிரபல விண்வெளி பொறியாளரான நம்பி நாராயணன் வாழ்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாதவனே இயக்கி, தயாரிக்கிறார். இந்த படத்தில் 75 வயது முதியவராக நடிக்கிறார் மாதவன்.
இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார். தமிழ், சஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்பு உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க அழைத்து செல்லி வைத்தார் போல "நோ" சொல்லியிருகிறார்கள் காஜல் அகர்வாலும், நடிகை ஸ்ருதிஹாசனும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாதவன் ஹேண்ட்சம் ஹீரோ என்றாலும் 75 வயது தாத்தாவாக நடிக்கிறார் அவருக்கு எப்படி ஜோடியாக நடிப்பது என மறுதிருப்பார்களோ என்னவோ..?

