காஜல் அகர்வாலுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார்..? - சொத்து மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்த முடித்துள்ளார். அந்தப் படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி இன்னும் ரிலீஸ் ஆகாமல் பெட்டியில் தூங்குகிறது.

அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார் காஜல். சமீபத்தில் ஒரு பேட்டியில் காஜல் பேசுகையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இருக்கிறது. 

தனக்கு வரப் போகும் கணவர் பக்திமானாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு அவருடைய பெற்றோர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மகனும் பிரபல பிசினஸ்மேனுமான ஒரு மாப்பிள்ளையாகப் பார்த்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

மாப்பிள்ளை வீட்டாரின் சொத்து மதிப்பு மட்டும் 3000 கோடியை தாண்டும் என்கிறார்கள். இதற்கு, காஜல் அகர்வால் அதற்கு சம்மதித்துவிட்டால் உடனே கல்யாணம்தான் என்கிறார்கள். 

முன்னதாக, காஜல் அகர்வாலின் தங்கை நிதி அகர்வால் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 2020ல் காஜல் அகர்வால் கல்யாணம் நடக்கும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

--- Advertisement ---