கதை, திரைகதை ரெடி - அவர் ரெடியானதும் வலிமை படப்பிடிப்பு தொடங்கும் - தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்


கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ஹிட் அடித்த "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் "வலிமை" என்ற படத்தில் நடிக்க உள்ளார். 

நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் இந்த படத்திலும் தொடர்கின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு தயாரிப்பாளர் போனிகபூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த போனி காப்போர் கதை, திரைக்கதை எல்லாம் ரெடி. தற்போது, அஜித் `வலிமை' படத்துக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். அவர் ரெடியானதும் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.