அடப்பாவமே..! - நீங்களுமா.??? - இணையத்தில் வெளியான ராதிகாவின் புகைப்படம் - விளக்கம் கேட்டு நோட்டீஸ் - ரசிகர்கள் ஷாக்


நடிகை ராதிகா 90 களின் தொடக்கத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். தற்போதும் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார். 

திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா சரத்குமார், தற்போது விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

மேலும், பிக்பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்கெட் ராஜா படத்திலும் முக்கியமாக வேடத்தில் நடித்துள்ளார். மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக வரபோகும் சீரியல் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். நடிப்பு, தயாரிப்பு என பன்முகம் கொண்டு எப்போதும் பிஸியாக இருக்கும் இவருக்கு இப்போது தர்மசங்கடமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது.

ஆம், இவர் நடித்துள்ள மார்க்கெட் ராஜா திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 


இதில், புகைபிடித்தபடி அமர்ந்திருக்கிறார் நடிகை ராதிகா. இதனை தொடர்ந்து மக்கள் நலவாழ்வு இயக்கம், நடிகை ராதிகா புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது தவறு என்றும் இந்த புகைப்படத்தை உடனடியாக அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 

மேலும், இது குறித்து நடிகை ராதிகா ஏழு நாட்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.