புதுக்கணவருடன் அப்டி, இப்டி இருக்கும் மைனா நந்தினி - வைரலாகும் வீடியோ..!


தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

ஆனால், இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில், கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரச்சனை காரணமாக, கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார். 

இதனை தொடர்ந்து சில மாதங்கள் வெளியே தலைக்காட்டாமல் இருந்த நந்தினி அண்மையில் சீரியல் நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தனது புது கணவருடன் நந்தினி மைனா அப்படி, இப்படி ஆட்டம் போட்டிருக்கும் டிக்டாக் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.