பிரபல நடிகரின் வாரிசு சினிமாவில் ஹீரோவாக என்றியாகவுள்ளார். முதல் படம் ஹிட் படமாக அமைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய தந்தை நடிகர் புதிதாக ஏதும் ஸ்க்ரிப்ட் கேக்காமல் ஏற்கனவே தெலுங்கில் ஹிட் ஆன ஒரு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி அந்த படத்தின் ரீமேக்கில் தனது மகனை நடிக்க வைக்க திட்டமிட்டார்.
அதே போல, தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் ஒருவரிடம் கொடுத்து மகனை வைத்து இந்த படத்தை எடுத்துகொடுங்க என்று பணத்தையும். கதையையும் ஒப்படைத்து விட்டார்.
ஆனால், படம் ஒழுங்காக வரவில்லை. அந்த முன்னணி இயக்குனர் அவர் ஸ்டைலில் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்துவிட்டார். இதனால் கடுப்பான நடிகர் அந்த படத்தை அப்படியே ட்ராப் செய்து விட்டார். பணமும் நஷ்டமாகி விட்டது.
இந்நிலையில், வேறு இயக்குனரை வைத்து அதே படத்தை இரண்டாவது முறையாக தலைப்பில் இன்னொரு வார்த்தையை சேர்த்து ஆரம்பித்தார் படமும் முடிந்து ரிலீசுக்குரெடியாகி விட்டது.ஆனால், படம் ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு, இப்போது இல்லை.
காரணம், முதல் படம் ட்ராப் ஆனது மற்றும் வாரிசு நடிகர் ஒரு போதை விவகாரத்தில் சிக்கியது போன்றவை தான். சரி, இந்த படமாவது ஒழுங்கா வந்திருக்கா என்றால்,, தவடாவை சொரிகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
பையனை நம்பி பணத்தை இறக்கிய நடிகரும், பையனும் இதனால் புலம்பி வருகிறார்களாம்.
Tags
Gossip