இதை மட்டும் பண்ணிடாதிங்க - கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அஜித் விடுத்த வேண்டுகோள்..!


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ஒருவழியாக பாய தயாராகி விட்டது. நாளை (நவம்பர் 29) வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில்,படத்தின் ப்ரோமொஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கௌதம் மேனன் என்னை அறிந்தால் படப்பிடிப்பின் அஜித் விடுத்த வேண்டுகோள் குறித்து சில தகவல்களை உதிர்த்துள்ளார்.

என்னை அறிந்தால் படப்பிடிப்பு தளத்தில் அஜித் என்னை அழைத்து, " எனக்காக மாஸ் காட்சிகளை தேவையில்லாமல் படத்தில் வைக்காதீர்கள். இது உங்கள் படம், உங்கள் படமாகவே வரத்தும். உங்க ஸ்டைல்-லையே படத்தை எடுங்க. அஜித் கௌதம் மேனனை மாற்றி விட்டார் என்ற பேச்சு வந்து விடகூடாது" என்று அஜித் கூறினார் என கூறியுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன்.