இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது "ஜோஸ்வா : இமை போல் காக்க" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க "பப்பி" படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் வருண் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கவிருந்த திரைப்படமான " யோஹான் - அத்தியாயம் ஒன்று" என்ற படத்தின் கதை தான் இந்த "ஜோஸ்வா : இமை போல் காக்க" என்று ஒரு தகவல் பரவி வந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இது யோஹான் கதை அல்ல. இது வேறு கதை. ஆனால், யோஹான் படத்தை போலவே அதிக பட்ஜெட் தேவைப்படும் படம் இது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து யோஹான் கதை தான் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
It’s been exciting to film a complete action flick with my hero Varun who’s pulled off some stylish action sequences and is ready to do more. #Joshua Imai pol kaakha..— Gauthamvasudevmenon (@menongautham) November 2, 2019
And this action wouldn’t have been possible without my stunt director Yannick Ben. Thank you team Joshua pic.twitter.com/REa6QjMCcL