இந்த ஒரு காரணத்துனால தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டேன் - மைனா நந்தினி ஒப்பன் டாக்


தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

ஆனால், இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில், கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரச்சனை காரணமாக, கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார். 

தொடர்ந்து இது குறித்து சர்ச்சையான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்த நிலையில் தற்போது சக நடிகரான யோகேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டிருக்கிறார் நடிகை நந்தினி. 

இந்நிலையில், எதனால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்ற காரணத்தை கூறியுள்ளார் மைனா நந்தினி. அவர் கூறியதாவது, கணவரை இழந்த துக்கத்தில் இருந்தபோது தனது நண்பரான யோகேஷ் உறுதுணையாக இருந்தார்.

இதனை தொடர்ந்து நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தோம். அப்போது, யோகேஷின் குடும்பத்தார் என்பெற்றோரிடம் பெண் கேட்டனர். இரண்டாவது திருமணம் என்றதும் என் வீட்டில் மிகவும் யோசித்தனர். 

பிறகு, யோகேஷ் கொடுத்த நம்பிக்கை மற்றும் அவரது குணநலன்கள் பிடித்துப்போக, இப்படி ஒருத்தரை வாழ்க்கையில் இழக்கக்கூடாது என திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார் நந்தினி.