‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகும் என அரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி சற்று முன் வெளியானது சும்மா கிழி என்ற பாடல். FDFS Fever-ஐ இப்போதே கொளுத்தி போட்டுள்ள அந்த பாடல் இதோ,



