அமுக்கு டுமுக்க அமால் டுமால் என வைரலாகும் "HorseShoe மீசை" அஜித்தின் புதிய கெட்டப்..! - புகைப்படம் உள்ளே..!


இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் 60வது படத்தில் தனது ரசிகர்களுக்கு அஜித் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுக்க போகிறார் என்கிறார்கள். 

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. 

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து, தல 60படத்தையும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். 

இந்நிலையில், அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அமுக்கு டுமுக்க அமால் டுமால் என வைரலாகி வருகின்றது. வித்தியாசமான "HorseShoe" எனப்படும் குதிரை லாட மீசையுடன் தோற்றமளிக்கும் அஜித்தை பார்த்த ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். 

இது தான் தல 60 படத்தின் கெட்டப்பா என்று உறுதியாக தெரியவில்லை.