கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்தியில் நடித்து வருகிறார். தமிழிலும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு சூப்பர் ஹீரோயி னாகும் ஆசை வந்திருக்கிறது.
சன்னி லியோன் என்ன ஆசைப்பட்டாலும் அதை நிறைவேற்றி வைப்பவர் அவரது கணவர் டேனியில் வெப்பர். இரவு பகலாக சன்னியும் டேனியலும் ஒன்றாக அமர்ந்து சூப்பர் ஹீரோயின் கதையை உருவாக்கிவிட்டனர்.
இதுபற்றி சன்னி லியோன் கூறும்போது, , 'சூப்பர் ஹீரோ கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கினோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது' என்றார்.
அந்த படத்தின் வேலைகள் ஒரு பக்கம் போய்கொண்டிருக்க மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார் நடிகை சன்னிலியோன்.
இந்த புகைப்படங்கள் பதிவேற்றப்பட்ட 12 மணி நேரத்தில் 12 லட்சம் லைக்குகள் அள்ளியுள்ளது.





