மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா..? - மிஸ் ஆகிடுச்சே..!


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் படத்திற்கு "A" க்ளாஸ் சினிமா ரசிகர்கள் அதிகம். இவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இவர் முதன் முதலில் இயக்கிய படம் "மின்னலே".

கடந்த 2001-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் மாதவன், நடிகை ரீமாசென் ஆகியோர் நடித்திருந்தார். இந்த படம் மற்றும்  இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றும் பல இளசுகளின் பேவரைட்.

2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் 100 நாட்களை கடந்தும் ஓடியது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ரீமா சென்னுக்கு பூகொடுக்கும் ஒரு காட்சியில் நடித்திருப்பார் கௌதம் மேனன்.


இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் அப்பாஸ் தானாம். மேலும், இந்த படத்தை தயாரிக்க இரண்டு பிரபல தயாரிப்பாலர்களிடம் முயற்சி செய்தார் அப்பாஸ் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.