பத்து ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் இணையும் நகுல்-சுனைனா ஜோடி..!


காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற நாக்க மூக்க, உனக்கென நான் எனக்கென நீ போன்ற பாடல்களை இசை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. 

பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. இந்த படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். 

அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுனைனாவும், நகுலும் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுனைனாவிடம் கேட்டதற்கு, அந்த தகவல் உண்மை தான் என உறுதிப்படுத்தியுள்ளார். 

கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மாசிலாமணி என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடியாகவுள்ளது இந்த ரீல் ஜோடி. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.