முரண்டு பிடிக்காமல், ஒத்துழைத்து, ஆணுறை கொடுக்கணுமா..? - இயக்குனரை விளாசிய நடிகை சின்மயி - வெடித்த சர்ச்சை..!


சமீப காலமாக இந்தியாவை ஆட்டி படைத்து வரும் ஒரு பிரச்சனை பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது. இப்படியான மோசமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் ஆந்திராவில் ஒரு பெண் மருத்துவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நாட்டில் ஏதாவது ஒரு கெட்ட விஷயம் நடந்தால் அதனை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என தான் இன்றைய அரசியல் வாதிகள் முயற்சி செய்கிறார்களே தவிர, ஒருவரும் இதற்க்கான தீர்வை சொல்வதற்கு தயாராக இல்லை.

ஆனால், இந்த முறை இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்நிலையில், தன்னை சினிமா இயக்குனர் என கூறிக்கொள்ளும் டேனியல் ஷர்வன் என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் , ""பாலியல் வன்கொடுமை ஒன்றும் மோசமானது அல்ல.ஆனால், கொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதால்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்கிறார்கள்.

வன்முறையற்ற பலாத்காரம் மட்டும்தான் பாதிக்கப்படும் பெண்களை கொடூரமாக கொல்லப்படுவதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. பெண்கள் மீது நடைபெறும் வன்முறைக்கு பெண்கள் அமைப்புகள்தான் காரணம்.பெண்கள்தான் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

பெண்கள் எப்போதும் கையில் காண்டம் வைத்துக்கொள்ளுங்கள். பாலியல் வன்கொடுமை செய்ய முற்படுபவர்களிடம் காண்டத்தை கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்." என்று கூறியிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் இதனை பார்த்த பாடகி சின்மயி "கற்பழிப்பு செய்யபட்ட பிறகு கொலை செய்யப்படாமல் இருக்க, முரண்டு பிடிக்காமல், ஒத்துழைத்து, ஆணுறை கொடுக்கணுமா..? மேலும், பெண்கள் நல அமைப்புகள் தான் கற்பழிப்பு சம்பவங்களுக்கு காரணமா..? இது என்ன கொடுமை.." என இந்த பதிவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.