அமெரிக்கரை மணந்தார் சிம்பு, தனுஷ் பட நாயகி ரிச்சா கங்கோபத்யாய் - இதோ புகைப்படங்கள்


தெலுங்கில் வெளிவந்த 'லீடர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக 'ஒஸ்தி' படத்திலும் நடித்தார். அதன் பின் சில தெலுங்குப் படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றுவிட்டார். 

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்கச் சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 


அதன்பின் பலமுறை மீண்டும் அவர் நடிக்க வருகிறார் என்ற செய்தி வந்த போதெல்லாம் அவற்றை மறுத்தார். இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க காதலர் ஜோ லாங்கெல்லா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.



அவருடைய திருமணம் அமெரிக்கா மற்றும் பெங்காலி முறையில் நடைபெற்றது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களிலுமே அவருடைய நடிப்பும், கிளாமரும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.