பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார் நடிகை சித்ரா.
சமீபத்தில், அதே சீரியலில் நடிக்கும் நடிகர் கதிருக்கும், சித்ராவிற்கும் நிஜமாகவே ஏதோ பிரச்சனை இருப்பதாக சமூக வலைத்தளத்தில் சில தகவல்கள் வெளியாகின.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் ஜோடியாக சேர்ந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது 2 நாட்கள் சாப்பிடாமல் வீட்டில் யாருடனும் பேசாமல் அதன் பிறகு தனது தந்தையிடம் அனுமதி வாங்கி தன்னுடைய அம்மாவுடன் 8 மணி நேரம் பயணம் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து சித்ராவை பார்த்து பரிசுகள் கொடுப்பதற்கு ரசிகர் ஒருவர் வந்துள்ளார்.
இதனை நடிகை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "இப்படி ஓர் ரசிகர்கள் கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று பதிவிட்டுள்ளார் நெகிழ்ந்துள்ளார்.


