நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. விஜய்யின் படங்கள் வெளியாகும் போதும்,அவரது பிறந்தநாளின் போதும் போஸ்டர், பேனர் என ஊரை கலக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம்.
சாலையோர ஏழைகளுக்கு புது துணிமணி, பொது மக்களுக்கு மரக்கன்று வழங்குதல், ரத்த தானம், அன்ன தானம் என ஆக்கப்பூர்வமான சமூக நற்பணிகளில் ஈடுபடும் ரசிகர்கள் மறு புறம் என வெறித்தனமான ரசிகர்களைகொண்டவர் நடிகர் விஜய்.
தற்போது, பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து "மாஸ்டர்" என்ற படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அசுரன் 100வது நாள் வெற்றி விழாகொண்டாடத்தில் நடிகர் பவன் குருவி படத்தின் 150வது நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்டேன். அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை என்று பேசி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அந்த பேச்சிற்காக வருந்துவதாகவும் கூறினார். இந்நிலையில், அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றி மாறன் விஜய்யை தாக்கி பேசியுள்ளது விஜய் ரசிகர்களை இன்னும் கடுப்பக்கியுள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெற்றி மாறனிடம், இளையதளபதி விஜயுடன் எப்போது படம் பண்ணுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த வெற்றி மாறன், கேள்வி எழுப்பிய நபரை பார்த்து " உதவி இயக்குனரா நீயி..., ரொம்ப துயரமான கேள்விப்பா இது.. ரொம்ப துயரமான கேள்வி..., அதற்கான காரணத்தை தனியா சொல்றேன்" என்று பேசியுள்ளார்.
இந்த கேள்விக்கு இயக்குவேன், அல்லது இயக்க மாட்டேன் என்று கூறுவதை விடுத்து துயரமான கேள்வி என்று வெற்றி மாறன் கூறியிருப்பது விஜய்யை தாக்குவது போல உள்ளது என விஜய் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.



