இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "தர்பார்" திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை விருந்தாக வெளியாகி ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போகும் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மகேஷ்பாபு-வை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் இயக்கியிருந்தார் முருகதாஸ் படம் மண்ணை கவ்வியது. அப்போதே, நடிகர் அல்லுஅர்ஜுனிடம் ஒரு கதையை கூறினார் முருகதாஸ்.
ஆனால், அவர் இயக்கியிருந்த ஸ்பைடர் திரைப்படம் தோல்வியடைதிருந்தாலும் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ் என்பதால் வேண்டாம் என மறுக்காமல் ஒரு ஹிட் கொடுத்துட்டு வாங்க, இதே கதையில் படம் பண்ணலாம் என்று கூறி அனுப்பினார் அல்லு அர்ஜுன் என்ற தகவல்கள் வெளியாகின.
அதனை தொடர்ந்து சர்கார் என்ற படத்தை எடுத்தார் முருகதாஸ். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆளும் கட்சியின் எதிர்ப்பு காரணமாக படம் ஒருவழியாக கரையை சேர்ந்தது. இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.
ஆனால், தற்போது இவர் இயக்கத்தில் வெளியான தர்பார் படம் ஹிட் அடிக்க அல்லு அர்ஜுனை இயக்கம் வாய்ப்பை பெற்றுள்ளார் முருகதாஸ். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பலாம்.



