இந்தியன் 2 விபத்து - 3 பேர் மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு - யார் தெரியுமா?


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர்  ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. நேற்று இரவு இப்படத்தில் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர்பலியான கொடூரமான சம்பவம் நடந்து சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதில் மது, ஸ்ரீ கிருஷ்னன், சந்திரன் என்பவர்கள் மரணம் அடைந்தார்கள், 9 நபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் தற்போது இந்த செய்தியை அறிந்த திரையுலகினர் தங்களது அழுந்த இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று இரவு பயன்படுத்தப்பட்ட கிரேன் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் கிரேன் கிடையாது எனவும் எடை குறைவான பொருட்களை மட்டுமே தாங்கும் சக்தி கொண்ட கிரேனை ஆபரேட் செய்த ராஜன் என்பவர் மீது வழக்கு தொகுக்கப்பட்டுள்ளது.

அவர் மீது தவறான முறையில் வாகனத்தை கையாளுதல், அஜாக்கிரதையாக இருத்தல் போன்ற 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவு ஆகியுள்ளதாவும், அவரை போலீஸ் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் 2 விபத்து - 3 பேர் மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு - யார் தெரியுமா? இந்தியன் 2 விபத்து - 3 பேர் மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு - யார் தெரியுமா? Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.