Posts

Showing posts with the label Indian 2

பகல் நேரத்துல நடிச்சு கொடுத்திருந்தா - நாங்க ஏன் இதை பண்ண போறோம்..? - விபத்திற்கு காரணமே அந்த வேர்ல்டு நடிகர் தானாம்..!

Image
வேர்ல்டு நடிகர் படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் நடந்த விபத்து ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இந்நிலையில், விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி கொடுத்து விட்டு தயாரிப்பு குழு தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என வேர்ல்டு நடிகர் ஜூட் விட்டது தயாரிப்பு தரப்பை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம். விபத்து நடந்த நாளன்று படப்பிடிப்பு பகலில்நடப்பது போன்று தான் திட்டமிடப்பட்டதாம். ஆனால், தன்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இரவு நேரத்தில் தான் வர முடியும் என கூறி விடவே இரவை பகலாக மாற்ற பிரமாண்டமாக பல நூறு லைட்டுகளை தொங்க விட சென்று விபத்து நடந்து மூன்று உயிரிகள் பலியாகியுள்ளது. சொன்ன தேதியில் , சொன்ன நேரத்துக்கு வராமல் இஷ்டத்துக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார் அந்த நடிகர் எனவும், இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் இந்த படத்தை எடுக்கவே நான் ஒப்புக்கொண்டிருக்க மாட்டோம் எனவும் கூறுகிறது தயாரிப்பு தரப்பு.  அவர் மட்டும் அன்று பகல் நேரத்தில் ஷூட்டிங் வந்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது எனவும் புலம்புகிறார்கள் படக்குழுவினர். மொத்தத்தில் ...

விபத்திற்கு காரணமானவர் கைது - கமல் மற்றும் ஷங்கருக்கு பறக்கும் சம்மன் - பரபரப்பு தகவல்..!

Image
கடந்த 19-ம் தேதி "இந்தியன் 2" படப்பிடிப்பு தளத்தில் இரவு நேரத்தில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலியாகினர். 10 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. கிரேன் ஆப்ரேட்டரின் தவறான இயக்கமே விபத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதே வேளையில் தயாரிப்புகுழுவின் மெத்தனமான செயல்பாடுகளே காரணம் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.  தற்போது கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள். மேலும் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் நேரில் விளக்கம் அளிக்க கோரி சம்மன் அனுப்ப காவல் துறை முடிவு செய்துள்ளாராம். காயமடைந்தவர்களுக்கும் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனராம். முக்கியமான, கேமரா மேனுக்கும் சம்மன் அனுப்பப்படும் என கூறுகிறார்கள். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த இந்த விபத்து திரையுலகினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

தொடரும் உயிர் பலி - இந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில் இதுவரை எத்தனை உயிர்கள் போயுள்ளது தெரியுமா..? - வெளியான அதிர்ச்சி தகவல்..!

Image
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று நடந்த விபத்து காலத்துக்கும் மறக்கமுடியாத ஒன்று. ராட்சத கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் உடல் நசுங்கி உயிரழந்த சம்பவம் படக்குழுவை தாண்டி ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், நேற்று நடந்த EVP ப்லிம் சிட்டியில் நடந்தவிபத்து ஒன்றும் அங்கு நடந்த முதல் விபத்து அல்ல இங்கே ஏற்கனவே பிகில் , பிக்பாஸ் உட்பட பலமரணங்கள் நடந்துள்ளன. முன்னதாக இந்த இடம் பொழுதுபோக்குபூங்காவாக இருந்தது.இது அரசு ஆக்கிரமிப்புநிலத்தில் உள்ளது என்று எழுந்த புகாரை தொடர்ந்து இது படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டது. கடந்த 2012 ல் இந்த இடத்தில் இளம் பெண் ஒருவர் ராட்டினத்தில் இருந்து விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து செப்டம்பரில் தண்டையார் பேட்டை சேர்ந்த சிறுவன் சறுக்கு விளையாட்டில் தவறி விழுந்து உயிர் தப்பியுள்ளான. அதே போல 2012 ல் அக்டோபர் மாதம் நாகலாந்தை சேர்ந்த அபியே மேக் என்ற விமான பணிப்பெண் ஆக்டோபஸ் ராட்டினத்தில் தவறி விழுந்து இறந்ததும் இதே இடத்தில் தான். இது போன்ற சம்பவங்களால் படப்பிடிப்பு தளமாக்கப்பட்ட இந்த ...

இந்தியன் 2 விபத்து - உயிரிழந்தவர்களுக்கு கமல்ஹாசன் நிதியுதவி - மொத்தம் எத்தனை கோடி தெரியுமா..?

Image
நேற்று (19 பிப்ரவரி 2020) இரவு நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் சேர்ந்தது. ஆம் படப்பிடிப்பில் இருந்து கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்களின் நபர்களின் விழுந்தது.  இதில் மது, ஸ்ரீ கிருஷ்ணா, சந்திரன் என்பவர்கள் மரணமடைந்தார்கள். இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் ஆவர்.  இந்நிலையில் இன்று மாலை இருந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த கமல் அவர்கள். அங்கு மரணமடைந்தவர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடி ரூபாயை நிதி உதவி செய்துள்ளத தகவல்கள் வெளியாகியுள்ளது. இறந்தவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. எனினும்,அவர்களின் குடும்பத்தினருக்கு எதிர்காலம் குறித்த அச்சம் சிறிதே விலகியிருக்கும் என்பது சற்றே ஆறுதலான விஷயம்.

இந்தியன் 2 விபத்து - 3 பேர் மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு - யார் தெரியுமா?

Image
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர்  ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. நேற்று இரவு இப்படத்தில் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர்பலியான கொடூரமான சம்பவம் நடந்து சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதில் மது, ஸ்ரீ கிருஷ்னன், சந்திரன் என்பவர்கள் மரணம் அடைந்தார்கள், 9 நபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் தற்போது இந்த செய்தியை அறிந்த திரையுலகினர் தங்களது அழுந்த இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று இரவு பயன்படுத்தப்பட்ட கிரேன் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் கிரேன் கிடையாது எனவும் எடை குறைவான பொருட்களை மட்டுமே தாங்கும் சக்தி கொண்ட கிரேனை ஆபரேட் செய்த ராஜன் என்பவர் மீது வழக்கு தொகுக்கப்பட்டுள்ளது. அவர் மீது தவறான முறையில் வாகனத்தை கையாளுதல், அஜாக்கிரதையாக இருத்தல் போன்ற 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவு ஆகியுள்ளதா...

"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..!

Image
1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள்.  இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபாலில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கமல் ஹாசனின் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.  தற்போது கமல் குணமடைந்து சென்னை பூந்தமல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.  இதில் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா, படப்பிடிப்பு ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள்.இந்த படத்தின் தயாரிப்பு உதவியா...

இந்தியன் 2 விபத்து - இயக்குனர் ஷங்கரின் கால் முறிந்தது குறித்து வெளியான தகவல் உண்மையா..? - இதோ விளக்கம்

Image
இயக்குனர் ஷங்கர் இயங்கிவந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் துணை இயக்குனர் ஒருவர் உட்பட மூன்று பேர் நசுங்கி இறந்தனர்.  மேலும் இயக்குனர் ஷங்கரின் கால் முறிந்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுகிறது. கமல்ஹாசன் விபத்து குறித்த வருத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது. இதனால், ஷங்கரின் நிலை என்ன.? என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கர் தீவிரமாக சிகிச்சை பிரிவில் உள்ளார் என பரவிய தகவல் குறித்து விசாரித்ததில் அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.  விபத்து நடந்த நேரத்தில் இயக்குனர் ஷங்கர் வேறு இடத்தில் லைட் செட்டிங் பார்த்துக்கொண்டிருந்ததால் இந்த விபத்தில் அவர் சிக்கவில்லை. தற்போது ஷங்கர் கமல்ஹாசன் என அனைவரும் காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அருகில் இருந்தே கவனித்து வருகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால், இந்தியன் 2 படப்பிடிப்பு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது....

10 நொடியில் உயிர்தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால் - கோரவிபத்தை நேரில் பார்த்த பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

Image
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "இந்தியன் 2" படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள EVP ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது.  அதில் நேற்று இரவு திடீரென ஒரு கிரேன் சாய்ந்து விழுந்ததில் நசுங்கி 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை நேரில் பார்த்த ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் கமல்ஹாசன் உயிர் தப்பியது பற்றி பேசியுள்ளார்.  "நான், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மூவரும் 10 நொடிகளில் உயிர் தப்பியுள்ளோம். நாங்கள் சென்று அமரவிருந்த கூடாரம் மீது தான் கிரேன் சாய்ந்தது" என குறிப்பிட்டு போட்டோவையும் பதிவிட்டுள்ளார். Providential escape from the ghastly mishap .Literally 10secs away from being crushed under.fortunate Kamal sir ,Kajal n me who were right under are safe #count your blessings our crushed canopy under the crane . we are #safe RIP our fellow mates @ikamalhaasan @MsKajalAggarwal pic.twitter.com/LB8...

வைரலான இந்தியன் 2 Fan Made போஸ்டர் - வெட வெடத்து போன படக்குழு - ஆர்வக்கோளறுல ஆப்பு வச்சிருவாங்க போல இருக்கே..!?

Image
இயக்குனர் ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்க என இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திலும் நடிகர் கமல் நடித்து வருகிறார்.  கடந்த 1996ல் இந்தியன் படம் எடுக்கப்பட்டபோது, அந்தப் படத்தில் சமூகப் பிரச்னையான ஊழலை மையமாக வைத்து இந்தியன் தாத்தா கேரக்டரில் நடிகர் கமல்அட்டகாசம் செய்திருந்தார். இன்று வரைக்கும் இந்தியன் தாத்தா ஸ்டைல் ஃபேமஸ். தற்போது, இந்தியன் 2 படத்தில், அந்த கேரக்டர் மட்டும் மையமாக இருந்தாலும் படத்தின் கதையை புதிதாக மாற்றி படமாக்கி வருகின்றனர். காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் நடித்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்தியன் 2 என்ற பெயரில், சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகி இருக்கின்றன. அவை போலியானவை என, படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு காரணம், இந்தியாவையே உலுக்கிய 2G அலைக்கற்றை ஊழலை நினைவு படுத்தும் 1,70,000,000,0000 ரூபாயை அந்த போஸ்டரில் இணைத்திருப்பது தான்.  இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்ட திமுக கனிமொழி மற்றும் ராசா ஆகியோர் நிரபராதிகள் எனவும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தும் கீழ் நீத...

சர்கார் படத்தின் இந்த ஒரு நிமிட காட்சி தான் இந்தியன் 2 படத்தின் மொத்த கதையே..! - eXclusive update

Image
இந்தியன் 2 படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி, சர்கார் படத்தில் வரும் ஒரு நிமிட காட்சி தான் இந்தியன் 2 படத்தின் மொத்த கதையே என்று கூறலாம். அதெப்படி ஒரு நிமிட காட்சியை ஒரு படமாக எடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா..?. சர்கார் படத்தில் ஹீரோ விஜய்யின் ஒட்டு கள்ள ஓட்டாக பதிவு செய்ததை அறிந்த பின்பு காரில் ஏறி விடு திருப்பும் போது கார் ட்ரைவரிடம் பேச்சு கொடுப்பார்.  அப்போது, ஒரு கலெக்டர் அலுவலகத்தை கடக்கும் போது இங்க என்ன பிரச்சனை என்று கேட்பார். அப்போது, கந்து வட்டி கடன் பிரச்னையால் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தை பற்றி கூறுவார் ட்ரைவர்.  இதை ஏன் யாரும் எதிர்த்து கேட்க வில்லை...? எல்லோருக்கும் தெரியப்படுத்தினீர்களா..? என்று கேட்பார் விஜய். அதற்க்கு, ட்ரைவர் கண்டிப்பா தெரியப்படுத்துவோம். ஒருவர் எங்களுக்கு வாட்சப்பில் அனுப்புவார். அதனை நாங்கள் இன்னொருத்தருக்கு அனுப்புவோம். அப்படி மாறி மாறி ஷேர் பண்ணிகிட்டே இருப்போம். அதுக்குள்ள இன்னொரு பிரச்சனை வந்துவிடும் அப்போது, இதை மறந்துவிட்டு அதனை ஷேர் செய்ய போய்விடுவோம் என்று கூறுவார்.  ...

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை..! - என்ன காரணம்.?

Image
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், 'இந்தியன் 2'. இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.  கமல் ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, வித்யூத் ஜாம்வால், விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.  ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது.  இந்நிலையில் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார். என்ன காரணம் என்று கேட்டதற்கு, இந்தப் படத்தின் ஷூட்டிங் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்க வேண்டியிருந்தது.  அப்போது, என்னிடம் தேதிகள் இருந்தன. ஆனால் ஷூட்டிங் தள்ளிப்போய் இப்போது தான் படம் ஆரம்பமாகியுள்ளது. இப்போது, நான் ஒப்பந்தம் ஆகியுள்ள படங்களில் நடித்து கொடுக்க வேண்டும்.  கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் நான் படத்தில் இருந்து விலகியுள்ளேன். வேறு எதுவும் பிரச்சனை இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 கதை மற்றும் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் - முழு விபரம் இதோ

Image
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் இந்தியன். இப்படத்தின் அன்றைய வசூல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் ரூ 100 கோடிகளை தாண்டும்.  படத்தை காட்டிலும் இந்த படத்தில் வந்தiஇந்தியன் தாத்தா இன்றளவும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார்.  இதில், நடிகர் கமல்ஹாசன் மட்டுமின்றி நடிகர் சித்தார்த் மற்றும் நடிகைகள் ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  கதைப்படி,  நடிகர் சித்தார்த் ஒரு யு-டியுப் பிரபலம். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் நடிக்கின்றாராம். யூ-ட்யூபில் பிரபலமாக இருக்கும் இவர் இந்தியாவில் நடக்கும் சில கொடுமைகளை தனது யூ-டியுப் சேனல் மூலமாக வெளிக்கொண்டு வந்து காட்டி இதனை நாம் எல்லோரும் தட்டி கேட்க வேண்டும், தட்டி கேட்க வேண்டும் என்று கதறுகிறார்.  ஆனால், நம்ம ஆளுங்க பரபரப்பாக பார்த்து விட்டு தட்டி கேட்பார்கள் என்று பார்த்தால் லைக் பட்டனை மட்டும் தட்டிவிட்டு கமெண்டுகளில் மட்டும் பொங்குகுகிறார்களே ...

இந்தியன் 2 படத்தின் மூலம் முதன் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து முன்னணி காமெடி நடிகர்..!

Image
இயக்குனர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இப்போது எடுத்து வருகிறார்கள்.  படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அதனை சுற்றி காய் நகர்த்தும் உலக நாடுகளின் மறைமுக அரசியலை தோலுரிக்கும் விதமாக இருக்கும் என கூறுகிறார்கள். மேலும், விண்வெளி சம்பந்தமான காட்சிகளும் படத்தில் இடம் பெறவுள்ள இந்த படம் ஒரு ஸ்பேஸ்-திரில்லர் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.  இந்நிலையில், இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் இணைந்துள்ளார். கமல்ஹாசன் - விவேக் இணையும் முதல் படம் இது. ஏற்கனவே, "பார்த்தாலே பரவசம்" என்ற கமல் படத்தில் விவேக் நடித்துள்ளார்.  ஆனால், இருவரும் இணைந்து நடிக்கவில்லை. விவேக் தனி ட்ராக்கிலும், கமல் தனி ட்ராக்கிலும் தான் நடித்தனர். இருவரும் இணைந்து நடிப்பது போல ஒரு காட்சி கூட இல்லை என்பது குறிப்பிடதக்கது.  முன்னதாக, விவேக் கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபுவை நடிக்க வைக்க திட்டமிட்ட படக்குழு காமெடி நடிகர் சில சீரியஸான காட்சிகளிலும் நடிக்க வேண்டும். ஒரு வேளை யோகி பாடு அப்படியான ...

அடேங்கப்பா..! இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..?

Image
'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார்.  இதில் ஒரு கமல்ஹாசன் தான். வயதான தோற்றத்தில் நடிக்கிறார். அவரது பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டார்.  இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் இந்த படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். முதல் பாகத்தில் சகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா என 3 ஹீரோயின்கள் நடித்தனர்.  இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இதில் சித்தார்த் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த மாதம் வெளிநாடுகளில் சில காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.  லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திட்டமிடபட்டுள்ளதாம். படப்பிடிப்பு நிற்காமல் குறித்த நேரத்தில் முடிந்து விட்டால் ஒகே. இல்லையென்றால், பட்ஜெட் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். க...

இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம் - என்ன காரணம்..?

Image
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன்-2' இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.  அதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளனர். இதற்கிடையில் சமீபத்தில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தனர்.  இந்நிலையில் தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான லொகேஷனுக்காக இயக்குனர் சங்கரும் அவரது குழுவினரும் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கான படக்காட்சிகள் ஐதராபாத்தில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் அங்குள்ள கடைவீதி ஒன்றை பார்வையிட்ட புகைப்படங்ககள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு முதலில் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் தான் ஒப்பந்தம் ஆனார்.  ஆனால் அவர் தற்போது வெளியேறிவிட்டதால், அவருக்கு பதிலாக இப்போது ரத்னவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரத்னவேல் இதற்கு முன்பு ஷங்கரின் எந்தி...

என்ன ஆனது இந்தியன் 2 - வெளியான அப்டேட்..!

Image
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் ஐகான் என்று கூறலாம். ஆனால், சமீப காலமாக அவருக்கு நேரம் சரியில்லை போல இருக்கிறது. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற ஷங்கர் இப்போது ஒரு ஹிட் படத்திற்கு காத்திருக்கிறார்.  இவர் மலை போல நம்பியிருந்த "2.0" திரைப்படம் மோசமான கதை காரணமாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.ஆனால், ஷங்கர் படம் எப்போது வரும் என இந்திய சினிமா ரசிகர்களே காத்திருப்பார்கள். அந்த வகையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார், இப்படம் தொடங்குவதாக கூறி 2 வருடம் கடந்து விட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு கூட தொடங்கவில்லை. இந்நிலையில், தற்போது லைகாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைகளுக்கு எல்லாம் சுமூகமாக முடிவு எடுக்க, படம் இந்த மாதமே தொடங்கவுள்ளதாம்.