அஜித்தின் "வலிமை" படத்தின் தலைப்பு மாறுகின்றது - இது தான் காரணமாம்.!


நடிகர் அஜித்தின் "வலிமை" திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சண்டை காட்சிகளில் டூப் வேண்டாம் நானே நடிக்கிறேன் அஜித் அடம் பிடித்து அடிக்கடி தனது உடலை புண்ணாக்கி கொள்கிறார்.

இது மாதிரி பண்ணாதிங்க என்று அவரது ரசிகர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து டூப் இல்லாமலேயே நடித்து வருகிறார்.

விபத்திற்கு பின் சிகிச்சை எடுத்துக்கொண்ட அஜித் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இடையில், பண தட்டுப்பாடு காரணமாக, இடையில் படப்பிடிப்பு நின்றதாக சில தகவல் வெளியானது. 

ஜோதிடத்தில் அதீத ஈடுபாடு கொண்டவரான போனி கபூர் 'படத்தின் தலைப்பு, "வலிமை" என்று இருப்பதால் தான், தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே படத்தின் தலைப்பை மாற்றலாம்' என படகுழுவுடன் ஆலோசித்துவருவதாக தகவல்கள் கசிந்துள்ளது..

அஜித்தின் "வலிமை" படத்தின் தலைப்பு மாறுகின்றது - இது தான் காரணமாம்.! அஜித்தின் "வலிமை" படத்தின் தலைப்பு மாறுகின்றது - இது தான் காரணமாம்.! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.