மாஸ்டர் படத்தின் "சம்பவம்" சிங்கிள் ட்ராக் ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்..!


பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம், கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். 

மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் படத்தில் விஜய் கதாபாத்திரத்துக்கு ஜேம்ஸ் துரைராஜ் என்றும், விஜய் சேதுபதிக்கு பவானி என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல, ரசிகர்கள் நீண்டநாட்களாக கேட்டுக்கொண்டிருந்த படத்தின் சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன் படி, வரும் 13-ம் தேதி மாலை மாஸ்டர் படத்தின் "சம்பவம்" சிங்கிள் ட்ராக் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. இது விஜய் ரசிகர்களை கொண்டாடத்தில் ஆழ்த்தியுள்ளது.
Previous Post Next Post