அந்தரத்தில் நிற்கும் "வலிமை" - காரணம் வேறு யாருமில்லை அஜித் தானாம்..! - என்ன ஆச்சு..?


நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் "வலிமை" திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பித்து விட்டது. ஆனால், படப்பிடிப்பு நடக்கிறதா..? இல்லையா..? என்று தெரியவில்லை.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், நடிகர் அஜித் தற்போது ஹெலிகேம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும், மார்ச் மாதத்திற்கு பிறகு தான் தன்னுடைய முழு கால்ஷீட்டையும் கொடுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இடையில் நேரம் கிடைத்தால் நடித்து கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளாராம். இதனால், இந்த மாதம் முழுதும் படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராது என கூறுகிறார்கள்.

படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகிறது என்பதால் வேக வேகமாக படப்பிடிப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.என்றாலும், வலிமை படம் தற்போது அந்தரத்தில் நிற்கிறது என்பது தான் லேட்டஸ்ட் அப்டேடாக உள்ளது.

அந்தரத்தில் நிற்கும் "வலிமை" - காரணம் வேறு யாருமில்லை அஜித் தானாம்..! - என்ன ஆச்சு..? அந்தரத்தில் நிற்கும் "வலிமை" - காரணம் வேறு யாருமில்லை அஜித் தானாம்..! - என்ன ஆச்சு..? Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.