மேடையில் கோட் சூட் போட்டு கொண்டு சாவு குத்து குத்திய இயக்குனர் கௌதம் மேனன் - ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர். இவருடைய சமீப கால படங்கள் அடிக்கடி சிக்கலை சந்திக்கின்றன. மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாய்ஸ் ஓவர் வைத்தே ரிலீஸ் செய்துவிட்டார்.

மேலும், விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படம் என்ன ஆனது..? எங்கு போனது..? என்றே தெரியவில்லை. இவரை பலரும் இங்க்லீஷ் இயக்குனர் என்று தான் கூறுவார்கள். ஆனால், இவருடைய படத்தின் தலைப்புகள் செந்தமிழில் தான் இருக்கும். இவருக்கு தமிழில் மீது இருக்கும் பற்று இதனை காட்டுகின்றது.  

தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கௌதம் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிய நிலையில், தற்போது சிங்கப்பூரில் பிரமாண்டமாக ஒரு இசை கச்சேரி நடத்தியுள்ளார். 

அதில் தான் கடந்து வந்த பாதை, தான் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் குறிப்பாக வாரணம் ஆயிரம் ‘அஞ்சல’ பாடலுக்கு மேடையிலேயே குத்தாட்டம் போட, அட கௌதமா இது என ரசிகர்கள் விசில் அடித்து ரசித்தனர்.