"தாலி" அணியச்சொல்லி என் புருஷன் சொல்லவில்லை - அது என் விருப்பம்..! - ரகுமான் மகளுக்கு ஆதரவாக பாடகி சின்மயி


ஆஸ்கார் நாயகன், இசைப்புயல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று வாரிசுகள் உள்ளனர். 

இதில், மூத்த மகளின் பெயர் "கதிஜா" ஆகும். இவர் சமீபத்தில், முகம் முழுவதும் மூடியபடி புர்கா அணிந்து இருப்பது பற்றி பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையாக விமர்சித்திருந்தார். 

அதற்கு கதிஜாவும் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த சர்ச்சையில் தற்போது பாடகி சின்மயி கதிஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். "மிகவும் சிறிய, கவர்ச்சியான உடைகளை அணியும் பெண்களை கண்டிப்பதும், அசிங்கப்படுத்துவது போல தான் இதுவும். புர்கா அணிவது கதீஜாவின் சொந்த விருப்பம்" என கூறியுள்ளார் அவர்.

இதனை தொடர்ந்து, ட்விட்டரில் நபர் ஒருவர் சின்மயி-யிடம் நீங்கள் தாலி அணியமாட்டீர்களா..? என்று கேள்வி கேட்க, கோபமான சின்மயி "தாலி அணியச்சொல்லி, குங்குமம் வைக்க சொல்லி என் கணவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ கூறவில்லை. நானே தான் விருப்பப்பட்டு அணிகிறேன். அது என் விருப்பம்" என பதிலடி கொடுத்துள்ளார்.