வலிமை படத்தின் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் இது தான் - மாஸ் அப்டேட்..!


பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து கொண்டிருக்கும் படம் "வலிமை". 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள "ராமோஜி ராவ் பிலிம்" சிட்டியில் நடந்து முடிந்தது. இந்த படம் வரும் தீபாவளிக்கு தான் ரிலீஸ். அதனால், இப்போதைக்கு அப்டேட் எதுவும் எதிர்பார்க்க முடியாது. 

மேலும் இப்படத்தை பற்றி ஏதாவது அப்டேட் வராதா..? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் "வலிமை" படத்தில் அஜித்தின் பெயர் என்ன என்ற அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதன் படி, ஈஸ்வரமூர்த்தி I.P.S., என்ற கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.