பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித்திரைப்பக்கம் வந்த ரோபோ சங்கர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார்.
இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியும் செய்தார்.
தொடர்ந்து நடன கலைஞராவும், தொகுப்பாளராகவும் பரிணமித்தார் ரோபோ சங்கர்.கடந்த 2002ல் பிரியங்கா என்னும் நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்த ரோபோசங்கருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகள் இந்திரஜா அண்மையில் அட்லி இயக்கி, இளையதளபதி விஜய் நடித்த "பிகில்" திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார்.
காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.



