யாரு மேல தப்பு..? - சனம் ஷெட்டி, தர்ஷன் விவகாரத்தில் ஒரு காட்டு காட்டிய பிக்பாஸ் காஜல் பசுபதி..!


கடந்த இரண்டு நாட்களாக இணைய வாசிகளின் கண்ணில் அடிக்கடி தென்படும் விஷயம் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷன் காதல் விவகாரம் தான். இவரது காதலி ஷனம் ஷெட்டி தர்ஷன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். 

அதுவும் கமிஷனர் அலுவலகத்தில் அதில், பிரதானமானது என்னவென்றால், தர்ஷன் என்னை திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்து விட்டு இப்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்பது மன ரீதியிலாகவும், உடல் ரீதியிலாகவும் என்னை காயப்படுத்தியுள்ளார் என்பதும் தான்.

இதற்க்கு பதிலளித்த தர்ஷன், சனம் ஷெட்டிக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் பிக்பாஸ்வீட்டிற்கு சென்ற பிறகு பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி அவர் பேட்டி கொடுத்ததுஎனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

மேலும், நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது முன்னாள் காதலனுடன் நைட்பார்ட்டியில் ஒன்றாக இருந்துள்ளார் ஷனம் ஷெட்டி. இதற்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 

பலமுறை தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அதற்க்கான ஆதாரமும் என்னிடம் இருக்கின்றது. இப்படியான விஷயங்கள் நடந்த பிறகு நான் எப்படி அவரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.


இந்த விவகாரம் வலை வாசிகளிடம் பேச்சை கிளப்பியுள்ளது. இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் பிக்பாஸ் காஜல் பசுபதி. இரண்டு பேரின் பேட்டியையும் நான் பார்த்தேன். ஷனம் ஷெட்டி தர்ஷனுக்கு பல விதங்களில் உதவி செய்துள்ளார். அதே நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் வெறுக்க தொடங்கியுள்ளார். 

ஒரு நடுத்தர குடும்பத்து பையன் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் இப்படி பிகினி உடையில் பேட்டி கொடுப்பதை நிச்சயம் விரும்ப மாட்டான். ஆனா, ரெண்டு பேரு மேலயும் தப்பு இருக்கு என்று கூறியுள்ளார்.