நடிகை சனாகான் தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், வெளியான அயோக்யா படத்தில் " வேற லெவல்" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.
ஆனால், தமிழில் "சிலம்பாட்டம்" தவிர இவருக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. இதனால், பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கினார். 2016-ம் ஆண்டு வெளியா "வாஜா தும் ஹோ" என்ற படத்தில் கவர்ச்சி குதிரையாக களமிறங்கினார்.
சினிமாவில் பிஸியாகவே இருக்கும் இவர் நடன இயக்குனர் மெர்வின் என்பவரை காதலித்து வந்தார். ஆனால், தற்போது அவரை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மெர்வினை பற்றி தன்னுடைய நண்பர்கள் பல விஷயங்கள் கூறியபோதும் அதை நான் நம்பவில்லை. ஆனால், ஒரு முறை என்னுடைய கண் முன்னே பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.
இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றது. நரம்பு பிரச்னையால் என்னுடைய முகம் பாதிக்கபட்டபோது சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அப்போது அவர் என்னை கண்டுகொள்ளவே இல்லை. ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை. என்று வேதனையுடன் கூறியுள்ளார் சனா கான்.


