நடிகை டாப்ஸி பன்னு தனது கணவர் மாத்தியாஸ் போவுடன் செய்த கடற்கரை விடுமுறை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செஷெல்ஸ் தீவில் உள்ள செயின்ட் ஆன் தீவில் எடுக்கப்பட்ட இந்த ரீலில், நடிகை வெறும் உள்ளாடை அணிந்த நிலையில் தென்னை மரத்தில் ஏற முயற்சிப்பது போல் காட்சிகள் உள்ளன.
கணவர் கீழே படுத்திருக்க, அவர் உதவியுடன் மரத்தில் ஏற முயன்ற நடிகை, பல முயற்சிகளுக்குப் பிறகும் வெற்றி பெறவில்லை. இறுதியில் அவர் கணவரின் முகப்பகுதியில் அமர்ந்த நிலையில் வீடியோ முடிகிறது. இந்தக் காட்சிதான் இப்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். “எக்ஸாட்டிக் இடம், ஆதரவான கணவர், வெற்றிகரமான வைரல் புகைப்படம் – இல்லை. கடைசி முயற்சியில் AI பயன்படுத்தியிருக்கலாம்” என்று நகைச்சுவையாக கேப்ஷன் எழுதியிருந்தார்.
மரத்தில் ஏறும் போது கணவரிடம் “என்னை மேலே தள்ளு” என்று சொல்வதும் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. ஆனால் பல ரசிகர்கள் இந்த முயற்சி உண்மையில் தென்னை மரத்தில் ஏறுவதற்காக அல்ல என்று கருதுகின்றனர்.
சில ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். “நீங்கள் நிஜமாகவே மரத்தில் ஏற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கணவர் முகத்தில் அமர்வது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் கேமராவை இயக்கி வைத்து பொதுமக்கள் முன் இப்படி ஒரு போஸை காட்டுவது அருவருப்பாக இருக்கிறது” என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடற்கரையில் வெறும் உள்ளாடையுடன் இத்தகைய போஸ் போடுவது பொது இடத்திற்கு பொருத்தமற்றது என்றும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர் இந்தத் தம்பதியினரின் நெருக்கத்தை பாராட்டியுள்ளனர். “இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இப்படி வேடிக்கையாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். இது அவர்களின் காதலுக்கும் நெருக்கத்திற்கும் நல்ல எடுத்துக்காட்டு. இதே போல் நீண்ட காலம் சேர்ந்து வாழ வேண்டும்” என்று பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சில செலிபிரிட்டிகளும் இந்த வீடியோவை பார்த்து சிரித்துள்ளனர்.
டாப்ஸி பன்னு தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானவர். 2024 மார்ச்சில் மாத்தியாஸ் போவை திருமணம் செய்துகொண்டார். இருவரும் நீண்ட காலமாக உறவில் இருந்தனர். சமீபத்தில் வெளியான காந்தாரி படத்திற்காகவும் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த தனிப்பட்ட விடுமுறை வீடியோ மீண்டும் அவரை விவாதத்திற்குள்ளாக்கியுள்ளது.
வீடியோவை பார்த்த பிறகு பலர் “இது வேடிக்கையான தோல்வி வீடியோ தானே, இவ்வளவு பெரிதாக்க வேண்டியதில்லை” என்றும் கூறியுள்ளனர். ஆனால் பொது இடத்தில் இத்தகைய போஸை பதிவு செய்து வெளியிட்டது தேவையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. நடிகை இந்த விமர்சனங்களுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
Summary in English : Actress Taapsee Pannu shared a holiday reel from Seychelles with husband Mathias Boe. She tried climbing a beach tree for a photo while he helped from below, but the attempts failed and became a talking point. Some viewers criticised filming the pose in public. Others praised the couple’s playful bond and wished them a long life together. She captioned it as a failed viral picture moment.