"சிறப்பா செய்றோம்" - வலிமை படம் குறித்து வெளிப்படையாக கூறிய யுவன் ஷங்கர் ராஜா..!


இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் "நேர்கொண்ட பார்வை" படத்தை தொடர்ந்து "வலிமை" படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகின்றது.

இந்த படத்திற்குஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். அஜித் - யுவன் கூட்டணி என்றாலே ரசிகர்கள் ரண காளமாகி விடுவார்கள். இதுவரை, இவர்கள் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களின் இசையும் சூப்பர் ஹிட் ரகம்.

அஜித் ரசிகர்களின் நரம்பை சிலிர்க்க வைக்கும் பக்குவம் யுவனிற்கு புதிதல்ல. எளிமையான BGM இசையிலேயே அசால்ட் செய்து விட்டு போய்விடுவார். இந்நிலையில், வலிமை படத்தின் இசை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், " வலிமை படத்தின் வொர்க் போய்ட்டு இருக்கு. இப்போதைக்கு இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. ஆனா, சிறப்பா செய்றோம்"என்று கூறியுள்ளார்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.