கடந்த 19-ம் தேதி "இந்தியன் 2" படப்பிடிப்பு தளத்தில் இரவு நேரத்தில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலியாகினர். 10 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. கிரேன் ஆப்ரேட்டரின் தவறான இயக்கமே விபத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதே வேளையில் தயாரிப்புகுழுவின் மெத்தனமான செயல்பாடுகளே காரணம் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.
தற்போது கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள். மேலும் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் நேரில் விளக்கம் அளிக்க கோரி சம்மன் அனுப்ப காவல் துறை முடிவு செய்துள்ளாராம்.
காயமடைந்தவர்களுக்கும் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனராம். முக்கியமான, கேமரா மேனுக்கும் சம்மன் அனுப்பப்படும் என கூறுகிறார்கள்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த இந்த விபத்து திரையுலகினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.



