பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யாரு தெரியுமா..?


சீரியல் நடிகர் கவின் சமீபத்தில் நடைபெற்றே பிக்பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

ஆனால், இறுதி சுற்றுக்கு முன் தானாகவே முன்வந்து வெளியேறிவிட்டார். அபிராமி,சாக்‌ஷி, லாஸ்லியா என காதல் சர்ச்சைகளில் அவர்களுடன் இவர் சிக்கினாலும் அவருக்கென கவின் ஆர்மி துடிப்பாக செயல்பட்டு வருகிறது. 

அண்மையில் அவர் அடுத்ததாக ஒரு படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வந்தது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் கேப்டன் தென்றலாக நடித்த அம்ரிதா தான் நடிக்கிறாராம். 

மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினீத் என்பவர் இயக்கி தயாரிக்க, படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.